English Tamil Malay


கோலாலம்பூர் ஆக 14
மக்களவையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பெரும்பான்மையை இழந்து விட்டதாக அரண்மனைக்கு தாம் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் ஹருன் வாய் திறக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.

முஹிடின் பெரும்பான்மை இழந்து விட்டதாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி அரண்மனைக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் அஸாரின் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
இந்த கடிதம் குறித்து அம்னோ இளைஞர் பிரிவு நேற்று முன்தினம் போலீஸ் புகார் செய்துள்ளது.

இந்த கடிதம் உண்மையான உறுதிப்படுத்தப்பட்டால் நடப்பு அரசாங்கம் செய்யும் எந்த முடிவும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம் என பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப் தெரிவித்தார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை தெளிவடைய செய்வது மக்களவை சபாநாயகரின் கடமை என அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் முஹிடினுக்கு 220 எம்பிக்களில் 100 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாக அந்த கடிதத்தில் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

 26 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *