English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம் ஆக 13-நாட்டில் பொது முடக்கம் தொடங்கபட்ட நாள் முதல் மக்களுக்கு உணவு,வீட்டுக்கு தேவையான உதவி பொருட்களை கொடுத்து உதவி வரும் சமூக சேவகி திருமதி விஜயாள் அவர்களை பாராட்ட வேண்டும்.

மத்திய மாவட்டம் செபராங் பிறை,டேசா வாவசான் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் திருமதி விஜயாள் அவர்களின் சேவை அப்பகுதி மக்கள் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.

ஆன்மீகம்,சமூக சேவை ஆகியவை தனது கடமையாக அவ்வப் போது மக்களுக்கு வேண்டிய உதவிகளை அவர் செய்து வருகிறார்.

பல்லின மக்களுக்கு அவர் தனது சொந்த செலவில் உணவுகளை தாமாக சமைத்து கொடுத்து வருகிறார் என்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் குடியுரிமை பிரச்சனை,மருத்துவ தேவைகளுக்கும் பல உதவிகளை அவர் உதவி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தமது சக்திக்கு இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வதே தமது குறிக்கோள் என்றும், நாம் வாழும் காலத்தில் பிறருக்கு உதவி வாழ்வதே தமது கடமையும் இலச்சியமாகும் என திருமதி விஜயாள் புன்னகையுடன் கூறினார்.

 146 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *