English Tamil Malay


காராக் ஆக 11
இது அதிகார போராட்டத்திற்கான நேரம் அல்ல, மக்களின் உயிர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு ஜசெக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் நினைவுறுத்தினார்.

கோவிட் 19 தொற்றினால் பெரும் பாதிப்பிற்குள்ளான மக்களை காப்பாற்றும் இருதரப்பு அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார் அவர்.

குறிப்பாக தமது தொகுதியை உட்படுத்திய பெந்தோங் மாவட்டத்தில் இன்னும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

அரசியலைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பற்றியும் பேசவேண்டிய நேரமல்ல இது.
மக்கள் வாழ்வாதாரத்திற்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் அரசியல் நடத்துவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை கண்டறிவதில் அரசியல்வாதிகள் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

பெந்தோங்கில் கடந்த ஜூலை 31 வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ள 95,200 பதிவு செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் 25 விழுக்காட்டினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் 7 அரசாங்க கிளினிக்குகள் உள்ளன. நாளொன்றுக்கு ஒவ்வொரு கிளினிகும் 200 டோஸ் தடுப்பூசியை செலுத்தலாம்.

ஆனால் இங்கு ஆகஸ்ட் மாதம் முறை இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த மட்டுமே கையிருப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்த ஒரு மாதத்திற்கு யாருக்குமே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்து வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

 62 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *