English Tamil Malay


லாபு ஆக 9
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட லாபு வட்டார மக்களுக்கு செனட்டர் டத்தோ ஏகே தாஸ் ஏற்பாட்டில் 100 உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
ராசா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் மற்றும் டிகே சமூகநல சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த உறவு கூடைகள் வழங்கப்பட்டதாக செனட்டர் டத்தோ ஏகே தாஸ் கூறினார்.


லாபு சட்டமன்ற தொகுதியில் உள்ளடக்கிய கம்போங் ஜிஜான்,தாமான் இகேஜி மாதாஹாரி,பாண்டார் என்ஸ்திக் மற்றும் கேஎல்ஐஏ குவார்டர்ஸ் வட்டார மக்களுக்கு இந்த உணவு கூடைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கோவிட் 19 தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி இவர்களின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *