English Tamil Malay

அகல்யா

பினாங்கு டிச 21- ஊடகத்துறை அவசியமான ஒன்றும் என்றும் ஊடகவியாளர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் பாராட்டத்துக்குரியது என,பினாங்கு ஈஸ்டன் ஓரியண்டல்  தங்கும் விடுதியில் நடந்த ஊடகவியாளர்களுடன் சந்திப்பில் மலேசிய உயர் கல்வி துணை அமைச்சர் டத்தோ மன்சோர் ஒஸ்மான் தமது சிறப்புரையில்  கூறினார்.

பினாங்கு முத்தியார ஊடகவியாளர் சங்கம் துணை அமைச்சர் டத்தோ மன்சோர் ஒஸ்மான் உடனான சந்திப்பை ஏற்பாடு செய்ததுடன்,இந்த சந்திப்பில் ௩௧ சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முதியோரை ஊடகவியலார் சங்கத்தின் தலைவர் தமதுரையில்,பல போராட்டங்களுக்கு மறதியால் ஊடகவியாளர்கள் தங்களின் பணியை சிறப்பாக ஆற்றி வருகின்றனர் ஆகவே எங்களின் ஊடக குடும்பத்துக்கு போதுமான நிதி உதவிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அதன் மூலமா பல சமூக நலவடிக்கைகளை சங்கம் ஏற்பாடு செய்ய முடியம் என சங்க தலைவர் இம்ரான்  தாவ்பிக்  கூறினார்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு வெ 8௦,௦௦ ௦ மதிப்புடைய நிதியை உதவியை துணை அமைச்சர் டத்தோ மன்சோர் ஒஸ்மான் பினாங்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர்,டாக்டர் பாய்சால் ராபிக் அடிகானிடம்   எடுத்து வழங்கினார்.

பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அக்ரோ சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் கால் நடை வளர்ப்பு,விவசாயம்,மூலிகை வளர்ப்பு  ஆகியவற்றை பி 40 மற்றும் எம் 40 பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பொருளீட்டவும் மற்றும் அப்பகுதியில் உள்ள சமூக மக்கள் பலனடையவும் உதவியாக இருக்கும் என டத்தோ மன்சோர் ஒஸ்மான்  நம்பிக்கை தெரிவித்தார். 

 8 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *