English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம்  ஆக 9 புக்கிட் மெர்தாஜம்,மத்திய மாவட்டம் அல்மா தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடா முனி ஆலயத்தை உடைக்க நினைக்கும் அல்மா இரப்பர் நில உரிமையாளருக்கு எதிராக செபராங் பிறை மாநகர் மன்றம் அதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர்,பேராசிரியர் பி.இராமசாமிகடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகக் கருதப்படும் ஸ்ரீ ஜடா முனி ஆலயத்தை உடைக்க நீதிமன்ற நில உரிமையாளர் நீதிமன்ற ஆணையை  பெற்றிருப்பினும் அதற்கு செபராங் பிறை மாநகர் மன்றத்தின் அனுமதி இல்லாமல் ஆலயத்தை உடைக்க முடியாது என்று இன்றுமாலை சம்பந்தப்பட்ட ஆலயத்தை நேரடியாகப் பார்வையிட வருகையிளித்த பேராசிரியர் பி.இராமசாமி மேலும் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களை உடைப்பதற்கு அனுமதி இல்லை என்றும், பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஆலயமோ அல்லது பிற இனங்களின் வழிபாட்டுத் தலங்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அப்பகுதி நிலம் பயன்பட்டாலோ பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தகுந்த நிலம் அல்லது மானியத்தைக்  கொடுத்து அத்தர்க்குரிய தீர்வைக்கான வேண்டுமே ஒழிய வழிபாட்டுத் தலங்களை  உடைக்க ஒருபோதும் பினாங்கு மாநில்அரசாங்கம் அனுமதி வழங்காது  எனப் பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிட்டார்.

இதனிடையே அல்மா ஸ்ரீ ஜடா முனி  ஆலயத்தில் அப்பகுதியில் உள்ள தோட்டத்து பொது மக்கள் தரிசனம் செய்யாமல் தடுக்கும்  நில உரிமையாளரின் நடவடிக்கை இறை ஆண்மை கொள்கைக்கு எதிரானது என பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைவரான பேராசிரியர் பி.இராபசாமி கண்டனம் தெரிவித்தார்.

இதனுடன் ஸ்ரீ ஜடா முனி  ஆலயத்திற்குப்  பாதுகாப்பு வழங்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதுடன், பினாங்கு மாநில அரசாங்கத்தின் சார்பில்  செபராங் பிறை மத்திய மாவட்டம் நில அலுவலகம் மற்றும் நில உரிமையாளரின் வழக்கறிஞர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டு பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தீர்வுகாணப்படும் என பேராசிரியர் பி.இராமசாமி குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜடா முனி ஆலயத்திற்கு உடன் வருகையளித்த செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷல் குறிப்பிடுகையில் செபராங் பிறை மாநகர் கழக அனுமதி இல்லாமல் ஆலயத்தைச் சுற்றி வெளி அமைக்கப்பட்டு பொது மக்கள் சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்திருப்பது நில உரிமையாளரின் தகாத செயல் என்பதுடன் இவ்விவகாரம் தொடர்பாக செபராங் பிறை மாநகர் கழக உயர் அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லப் போவதாக அவர் கூறினார்.



ஸ்ரீ ஜடா முனி ஆலயத்தைப் பொருத்த வரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆலயத்தை அகற்ற நில உரிமையாளர் முயற்சி மேற்கொண்டு வந்திருப்பதுடன் ஆலயத்திற்கு மாற்று நிலம் ஒன்றை நில உரிமையாளர் பொருத்தமில்லாத இடத்தில் கொடுக்கப்பட்டது,அதனை ஆலய நிர்வாகத்தினர் ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன் பின்னர் ஆலயத்தை அகற்ற அல்மா இரப்பர் நிறுவனம் நீதி மன்ற தடை உத்தரவைப் பெற்று ஆலயத்தை அகற்ற எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி விளக்கமளித்தார்.

ஆலயத்தை உடைக்க நினைக்கும் அல்மா இரப்பர் நில உரிமையாளர் நடப்பு சட்ட விதிகளைக் குறிப்பாக செபராங் பிறை மாநகர் கழகத்தின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு ஆலயத்தை உடைக்க எண்ணியுள்ளதை சதீஸ் முனியாண்டி கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே  அல்மா ஸ்ரீ ஜடா முனி ஆலய நிர்வாகத்திறனுடனான பேச்சு வார்த்தையில்  ஆலய தலைவர் பி.ஹாரிகுமார்,பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர் என்.எஸ்.தனபாலன்,இந்து அறப்பணி வாரிய அதிகாரி கிருஷ்ணசாமி, பினாங்கு இந்து இளைஞர் பேரவைத்  தலைவர் கோமகன் லிங்கம்,தென் செபராங் பிறை பொது பாதுகாப்புப் படையின்  கெப்டன் ராம்,அல்மா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய செயலாளர் ஆ.ஜெயராமன் வழக்கறிஞர் ஷம்ஷீர் சிங் திண்ட்  ஆகியோர் கலந்து கொண்டனர்

 94 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *