English Tamil Malay

சிம்பாங் அம்பாட் ஆக 9-பினாங்கு மனித நேய சமூக நல இயக்கம் சார்பில் 70 வசதி குறைந்த குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கியது.

இயக்க தலைவர் ஷாலினி சீனிவாசன் தலைமையில் பண்டார் தாசேக் முத்தியரா எம்பிகே மண்டபத்தில் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பொது முடக்கத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு தென் செபராங் பிறை மாவட்டங்களில் உள்ள அல்மா,தாமான் சுக்குன்,சிம்பாங் அம்பாட்,தாமான் தங்லிங் மற்றும் தாமான் மெராக் அகிய குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு உதவி பொருட்கள் சென்று வழங்கியதாக ஷாலினி சீனிவாசன் மேலும் கூறினார்.

தங்களின் முயற்ச்சிக்கு உதவிடும் இயக்க பொருப்பாளர்கள்,தொண்டூழியர்கள்,அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு ஷாலினி சீனீவாசன் நன்றி கூறினார்.

உணவு பொட்டலங்கல் வழங்கும் நிகழ்ச்சியில் உடன் சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பிரித்திபல் சிங் அப்துல்லா,சிம்பாங் அம்பாட் பேல் சிட்டி எம்பிகே தலைவர் இயோ கிம் கிம்,செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் கலை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பினாங்கு மனித நேய சமூக நல இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருவது பாராட்டுகுறியது என்றும் மக்களுக்கு உதவுவதில் அரசு சாரா இயக்கங்களின் முயற்ச்சிக்கு தாம் என்றும் ஆதரவு வழங்குவதாக அவர் கூறினார்.

 60 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *