English Tamil Malay


நீலாய் ஆக 8
கோவிட் 19 தொற்று மோசமடைந்து வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்ட வேண்டாம் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் கேட்டுக்கொண்டார்.
கோவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று எங்கு நீலாயில் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்பாடு செய்த தடுப்பூசி மைய தொடக்கவிழாவில் அவர் பேசினார்.

நீலாய் லிட்டல் சென்னை திவிசி மண்டபத்தில் அமைக்கப்பட்ட இந்த தடுப்பூசி மையத்தில் நேற்று 3 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி வரும் ஆகஸ்ட் இருபத்தி எட்டாம் தேதி இந்த மையத்தில் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தினசரி கோவிட் 19 தொற்று மற்றும் மரண சம்பவங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டுமென அவர் நினைவுபடுத்தினார்.

நீலாயில் கோவிட் 19 தடுப்பூசி மையத்தை ஏற்படுத்த நெகிரி செம்பிலான் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ சரவணகுமார் மிக முக்கிய பங்காற்றியதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் பாராட்டினார்

 110 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *