English Tamil Malay


பெட்டாலிங் ஜெயா ஆக 5
பொருளாதார துறைகள் தொடர்ந்து மூடப்பட்டால் மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என பாக்காத்தான் ஹராப்பான் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ எச்சரித்தார்.

ஆகையால் இந்த நிலையை தவிர்க்க தனது பொது முடக்க கொள்கைகளை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும் தேசிய மறுமீட்சி திட்டத்தின் இரண்டாம் நிலைக்கு செல்ல தினசரி தொற்று 4000 மாக குழையும் வரை அரசாங்கம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அவர் நினைவுபடுத்தினார்.

கடந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் தேசிய மறுமீட்சி திட்டத்தின் முதல் நிலையின் கீழ் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் தினசரி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனது வியூக திட்டங்களை மத்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய நேரம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிறிய தொழில்துறைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிகை அலங்கார கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும் உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார்.

 28 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *