English Tamil Malay

சிறந்த அங்கிகாரமாகக் கருதுகிறேன் சிஸ்கோ நிறுவன அதிபர் க.காளிதாசன்  பெருமிதம்.

ஆர்.தசரதன்

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நியாக நேரம் ( NiagaTimes ) மற்றும் டோப் 10 ஆசிய( Top Ten Asia ) எனும்  நிறுவனம் இணைந்து சிறந்த தகவல் தொழில்நுட்ப விருது வழங்கும் நிகழ்ச்சியை ஏற்று நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த சிறந்த தொழில் துறைக்கான விருது நிகழ்ச்சி இவ்வருடம் நடமாடு காட்டுப்பாடு ஆணையின்  காரணமாகக் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது.
இந்த சிறந்த  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கான விருதளிப்பு  விழாவில்   சிஸ்கோ ( Syscore Sdn.Bhd )நிறுவனத்துக்கு உலகின்சிறந்த தயாரிப்பு ( Made For World ) எனும் சிறந்த தகவல் தொழில்நுட்ப  நிறுவனத்துக்கான  விருதை  இளம் தொழில் முனைவரான காளிதாசன்  கணேசன் பெற்றதாகத் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் கணினி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான  சிஸ்கோ ( Syscore Sdn.Bhd ) தொழில் நிறுவன உரிமையாளரான க.காளிதாசன் வளம் வருகின்றார்.
2012 ஆம் ஆண்டு சிறு கணினி வர்த்தக மற்றும் பழுதுப்பார்ப்பு  நிறுவனமாகத் தனது நிறுவனத்தை ஆரம்பித்தார்  க.காளிதாசன்  கணேசன்.தமிழ்ப்பள்ளிகளின் கணினி தொழில்நுட்ப  தேவைகளுக்கு ஏற்ப காளிதாசின்   நிறுவனம் சேவைகளை வழங்கி வந்தது.

இவரின் தரமான சேவையின் மூலமாக தமிழ்ப்பள்ளிகளில் கணினி தொழில்நுட்பம் உரு மாற்றம் பெற்றுப் பெறும் மாற்றத்தைக் கண்டது.
காளிதாஸ் அவர்களின் கணினி தொழில்நுட்ப  நிறுவனத்தின் மூலமாக பினாங்கு மாநிலத்தில் உள்ள சில தமிழ்ப்பள்ளிகளில் 21ஆம்  நூற்றாண்டு வகுப்பறைகளைத் திட்டத்தை மேம்படுத்தியதுடன்,அதில் அதிநவீன கணினிகளை இவரின் நிறுவனம் பொருத்தி சேவைகளை மேலும் வலுப்படுத்தியது.

தமிழ்ப்பள்ளிகளில் 21 ஆம்  நூற்றாண்டு வகுப்பறைகள் உருவாகவே,பள்ளியின் ஆசிரியர்களும்  தகவல் தொழில்நுட்ப பாடங்களைப் போதிக்க ஆயுத்தமாகினர் .

இதனை மென் மேலும் மேம்படுத்த  ஆசிரியர்களுக்குத் தனது நிறுவனத்தின் வழியாகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார் க.காளிதாசன்.

இதனை தொடர்ந்து பினாங்கில் உள்ள அணைத்து தமிழ்ப்பள்ளிகளில் ஸ்மார்ட் துறைமுகம்(Smart Board ) பொருத்தப்பட்டதன் பயனாகப்  பள்ளி மாணவர்கள் மத்தியில்  பாடப் புத்தக சுமை பெறுமளவில் குறைக்கப்பட்டது.

அது  மட்டும் அல்லாமல் தமிழ்ப்பள்ளிகளில் கணினிக்கூடம் மற்றும் அதற்க்கான தொழில்நுட்ப வகுப்புகளையும்  நடத்தினார் காளிதாஸ்.இதனுடன் பினாங்கு மாநில அரசாங்கத்தின் உதவியுடன் ஏழை மாணவர்கள் பயன் பெரும் வகையில் இயந்திரக் கல்வி ரோபோட்டிக் தகவல் தொழில்நுட்ப போதனைகளும் நடத்த வகை செய்தார் காளிதாஸ் கணேசன்.

மாணவர்கள் மத்தியில் பெரிதளவிலான போட்டிகளை நடத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் புரட்சி 4.0 துறையில் உருமாற்றத்தைக் கொண்டு வந்தார் கா.காளிதாஸ். இவரின் சிந்தனையும் முயற்சியையும் பார்வையிட்ட சில அரசாங்க சார்பற்ற இயக்கங்கள் இவர் நிறுவனத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை  நடத்தினர்.

பினாங்கை விடுத்தது மலேசியாவில் உள்ள இதர மாநிலங்களான கெடா,பேராக்,மாலாக்கா,சிலாங்கூர் மற்றும்  ஜோகூர் போன்ற மாநிலங்களில் வருவாக்கம் செய்யப்பட்ட கணினி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்,இதில்  10,000க்கு மேற்பட்ட  மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிஸ்கோ நிறுவனத்தில் இனைந்து தொழில்நுட்ப  கல்வியை  பயின்று பலன் பெற்று வருகின்றனர்.இதனிடையே சுமார் 200 தமிழ்ப்பள்ளிகளில்  ரோபோட்டிக்  இயந்திர தொழில் நுட்ப பட்டறைகள்,பயிற்சிகளும்  நடத்தப்பட்டது வருவதாக க.காளிதாசன் அலைஒலி ஊடகத்திடம்  கூறினார். 

இதனுடன் கோவிட்-19 தொற்று கால கட்டத்தில் உலக பொருளாதார வீழ்ச்சி அடைந்த வேளையில் தனது மாறுபட்ட  சிந்தனையைக்   கொண்டு  நேரடி விற்பனை  வழியாகக் கணினி போதனைகளையும் விற்பனைகளையும்  செய்து தனது வணிகத்தை பெருக்கிக்கொண்டார் க.காளிதாசன்.
காளிதாசன்  கணேசன் எதிர்காலத்தில் இயந்திரவியல் ,தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறைகளில்  உரு மாற்றம் கானும் என்பதால் தொழில் புரட்சி 4.0 போன்ற தொழில் துறை உருவாகிப் பல  மாற்றங்கள் காணும்  என்பதால் அதனை எதிர்கொள்ள நமது இந்திய மாணவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டியதால் அதற்குத் தனது பங்களிப்பையும்  அயராது உழைப்பை அந்த  இலட்சியம் ஈடேற பாடுபடப் போவதாக காளிதாஸ் கணேசன் உறுதிப்படக்  கூறினார். 

 64 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *