English Tamil Malay


கோலாலம்பூர் ஆக 2
நாடாளுமன்றத்தில் கோவிட் 19 தொற்று இருப்பதற்கான ஆதாரத்தை காட்டும்படி ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவிற்கு சவால் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் 4 டெல்தா வெரியன்ட் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் கூறியிருப்பது எதிர்பாராத ஒன்று என கெலாங் பாத்தா எம்பியுமான அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெறவிருந்த மக்களவை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இன்று காரணத்திற்காக இதுபோன்ற விளக்கங்கள் தரப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஏன் கோவிட் 19 தொற்றை பற்றி நூர் ஹிஷாம் எதையும் கூறவில்லை என அவர் வினவினார்.

திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலாளர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *