English Tamil Malay


கோலாலம்பூர் ஆகஸ்டு 1
அனைத்து எம்பி களுக்கும் மத்திய அரசாங்கம் வழங்கிய தலா 3 லட்சம் வெள்ளியில் தமது தொகுதி மக்களுக்கு 3000 உணவு கூடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பாக்காத்தான் ஹராப்பான் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ கூறினார்.

மத்திய அரசாங்கம் வழங்கிய தொகையில் மிக சிக்கனமாக செலவு செய்து தமது தொகுதி மக்களுக்கு போதுமான முட்டைகள் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவு கூடைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த சிக்கன நடவடிக்கையால் இன்னும் சில நூறு கூடுதல் உணவு கூடைகள் தமது தொகுதி மக்களுக்கு வழங்க இயன்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த உணவு கூடைகள் வழங்க பெட்டிகளில் எனது புகைப்படத்தை நான் அச்சிட வில்லை. காரணம் இந்த தேவையற்ற பணிக்கு கூடுதல் பணம் தேவைப்படும்”என முன்னாள் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சருமான ஹன்னா தெரிவித்தார்.

இயக்கங்கள், கட்டிட நிர்வகிப்பார்கள், கம்பங்கள், தோட்டங்கள், நீண்ட வீடுகள், மலிவு விலை வீடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மூலம் இந்த உணவு கூடைகள் விநியோகிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த உணவு கூடைகள் பெற்றவர்களின் அனைத்து தகவல்களும் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

இருப்பினும் இந்த 3000 உணவு கூடைகள் போதாது என்பதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் நினைவில் கொள்ளவேண்டும். 2 வாரங்களுக்கு மட்டுமே இந்த உணவு கூடைகள் இவர்களுக்கு போதுமானதாக இருக்கும் என ஹன்னா தெரிவித்தார்.

 119 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *