English Tamil Malay


ஜோர்ஜ் டவுன் ஆக 1
பினாங்கில் உள்ள மருத்துவமனைகளின் உணவு அறைகள் மற்றும் பல் மருத்துவர் கிளினிக்குகள் கோவிட் 19 வார்டுகளாக மாற்றம் காண்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த உணவு அறைகள் மற்றும் பல்மருத்துவ கிளினிக்குகள் கோவிட் 19 வார்டுகளாக மாற்றப்படும் என தமது பெயரை குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறினார்.

இவ்வாரத்தில் இங்குள்ள மருத்துவமனைகளில் நிலைமை மோசமடைந்துள்ளது.கோவிட் 19 தொற்றின் காரணமாக அதிகமான நோயாளிகள் இங்குள்ள மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை மோசமடைந்து வருவதால் இங்குள்ள மருத்துவமனைகளில் உணவு வகைகள் மற்றும் பல்மருத்துவ கிளினிக்குகள் கோவிட் 19 வார்டுகளாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *