English Tamil Malay


பெட்டாலிங் ஜெயா ஜூலை 31
துணை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என ஆருடங்கள் அதிகரித்து வருகின்றன.
இடைக்கால பிரதமராக இஸ்மாயில் சப்ரி நியமிக்கப்பட வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்திற்கு அம்னோ தலைமைத்துவம் நெருக்குதல் தந்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறின.
இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சரவையை சேர்ந்த பெரும்பாலும் இதற்கு இணக்கம் தெரிவித்து விட்டதாகவும் அம்னோ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
அரண்மனை உடனான சர்ச்சையை தொடர்ந்து பதவி விலகும்படி கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை உறுப்பினர்கள் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு ஆலோசனை கூறியதாக அவர் சொன்னார்.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் என்ன முடிவு செய்துள்ளார் என்பது குறித்து எதுவும் தெரியாது என்றார் அவர்.
ஆனால் இஸ்மாயில் சப்ரி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு இடைக்கால பிரதமராக தலைமை ஏற்க உள்ளார் என்று ஆருடங்கள் அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.

 234 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *