English Tamil Malay


ஆர்.தசரதன் 

பினங்கு டிச 18-கெடா மாநிலத்தில்  அன்மையில் இரண்டு இந்துக் கோவில்கள்,ஆலோர் ஸ்டார் மாநகர் கழகத்தினால் உடைக்கப்பட்டது.இதனால் இந்நாட்டு இந்துக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இந்து அமைப்புகள் ஆலய உடைக்கபட்டதால் கோபத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்திருப்பதை மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசிய இளைஞர் பிரிவு தலைவரும்,பினாங்கு மாநில இந்து தர்ம அருள் நிலைய தலைவருமான  என்,எஸ்.தனபாலன் கூறினார்.

கெடாவில் உடக்கபட்ட ஆலயங்கள்  இந்து மத அமைப்புகளிடமோ அல்லது இந்தியர்கள்  கட்சிகளிடமோ  எந்தவொரு ஆலோசனையும்  கலந்துரையாடலோ இன்றி கோயில்களை இடிக்குமாறு உள்ளூராட்சி மன்ற குழுவுக்கு  மாநிலத் தலைவராக இருக்கும் கெடா மந்திரிபெசர் அவர்களின் செயலினால் அவமரியாதையை மலேசிய இந்து தர்ம தேசிய இளைஞர் பிரிவு  மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது என்று அறிக்கையின் வலி என்,எஸ்.தனபாலன் விவரித்தார். 

மலேசியா இந்து தர்ம மாமன்றம் தேசிய இளைஞர்  பகுதியினர்  தனிப்பட்ட முறையில் கெடா மாநில தலைமைத்துவத்தில் உள்ள மந்திரி பெசார்  மற்றவர்கள் மீது நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும், மேலும் இத்தகைய கடுமையான ஆலய உடைப்பு செயல்களைச் செய்வதற்கு முன் இந்து சமூகங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் என்.எஸ். தனபாலன் கூறினார்.

இந்நாட்டிற்காகப் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தனது சிறந்த பங்களிப்பு மற்றும் தியாகம் செய்த நாட்டின் குடிமக்களை மதிக்காமல் பழைய இந்து கோவில்களை இடிப்பதற்கான சொந்த முடிவுகளின் எடுப்பதற்கு முன்னர் சம்பந்தப் பட்ட ஆலயங்களுக்கு மாற்று இடம் அல்லது தகுதியான இழப்பீடுகளை வழங்கி ஆளை உடைப்புதனை தவிர்க்கலாம் என்பதுடன் அதற்கு   அரசு இந்து மத அமைப்புகளிடமிருந்து கலந்தாலோசித்து  முடிவை எடுக்க வேண்டும் என்று என்.எஸ்.தனபாலன் நந்தகுமார் வலியுறுத்தினார் 

 175 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *