English Tamil Malay


அகல்யா
கோலாலம்பூர், டிச 07 –மதிகவின் முன்னாள் தேசியத்து தலைவரும், மதிக கிள்ளான் சாலை கிளையின் முன்னாள் தலைவருமான பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பி.எஸ்.மணியம் இன்று17-12-2020 இரவு மணி8:00 அளவில்,கோலாலம்பூர் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் காலமானார்.

 பினாங்கு, பிறையில் பிறந்து வளர்ந்தவரான மானமிகு பி.எஸ்.மணியம், பிற்காலத்தில் சிலாங்கூருக்கு குடி பெயர்ந்து, அரசு மலேசிய இராணுவ இலாகாவில் பணியார்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இளமை காலத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு, மலேசியத் திராவிடர் கழகத்தின் தன்னை இணைத்துக்கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்து
வந்துள்ளார். 

மதிகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த மானமிகு
பி.எஸ்.மணியம் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி தேசியத் தலைவராக இருந்த காலத்தில் நீண்டகாலம் மதிகவின் தேசியத் துணைத் தலைவராக
இருந்து சேவையாற்றுவர். 

மதிகவின் நீண்டநாள் உறுப்பினரான
இவர் மதிகவின் தேசியத் தலைவராகத் தன்னை உயர்த்திக்கொண்டு, 6 வருடங்கள் மதிக தேசியத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இவரின்
தலைமைத்துவத்தில் மதிக எதிர் நோக்கிய பல்வேறு
பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்.

மதிக கட்டடம் கடனில் மூழ்கி இருந்த வேளையில், இவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு குழுவை அமைத்து, நாட்டில் உள்ள  இந்திய அமைச்சர்கள் , பிரமுகர்கள் என்று நாடு முழுவதும் சென்று நன்கொடை திரட்டி, கட்டடத்தின் கடனை அடைத்தவர் மானமிகு பி.எஸ்.மணியம் என்றால் அது மிகையாகாது.
 
அண்மைய சில காலமாக உடல் நலம் குன்றி காணப்பட்ட இவர்,
கோலாலம்பூர் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று 17-12-2020 வியாழக்கிழமை, இரவு மணி 8:00 அளவில் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பி.எஸ்.மணியம் காலமானார்.

இவரது பிரிவு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், அன்னாரின் சுயமரியாதை சேவைகள் யாவும் கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படும் என்று மதிகவின் நடப்பு
தேசியத் தலைவரும், பினாங்கு மதிக தலைவருமாகிய மானமிகு
ச.த.அண்ணாமலை தனது இரங்கல் செய்தியில் கூறினார். மேலும்

மதிகவின் முன்னாள் தேசியத் தலைவர் மானமிகு ரெ.சு. முத்தையா,
மதிக பினாங்கு மாநில துணைத் தலைவர் செ.குணாளன், செயலாளர் சோ.மருதமுத்து, ஜாசா அமைப்பின் முன்னாள் அதிகாரி மா.பார்த்திபன், மதிக பினாங்கு  மாநில முன்னாள் தலைவர் க.இராமன், இரா.ப.தங்கமணி, மதிக தேசியத் துணைத் தலைவர் சா.ரா.பாரதி, தேசியப் பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம், மதிக பேரா மாநிலத் தலைவர் இரா.கெங்கையா, மதிக கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன், ச,வடிவேலு, மு.ஞாராயணசாமி, வெ.அர்ஜூணன், துரை.வாணிதாசன்,
மா.இராஜகோபால், சி.ஆரியமாலா, ச.முனியாண்டி மேலும் மதிக
தோழர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு
செய்தனர். 

தமிழகத்திலிருந்து திக தலைவர் மானமிகு கி.வீரமணி
ஐயா உட்படத் தமிழக திக உறுப்பினர்கள் தங்களின் இரங்கலைப் பதிவு
செய்தனர்.

 58 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *