English Tamil Malay

அகல்யா/ஆர்.தசரதன்

பிறை, டிச -17 -60 முதல் 80 ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக பிறை, கம்போங் மானிஸ் குடியிருப்பாளர்களை, திடீர் என்று இடத்தை கலி செய்ய சொல்வது விவேகமான செயல் அல்ல என்று பேராசிரியர் இராமசாமி கடுமையாக சாடினார்.

ரயில்வே எசெட் கார்ப்பரேஷன் எனப்படும் (ஆர்.ஏ.சி ) தொடர்வண்டி சொத்துடமை நிறுவனம் நேற்று திடீர் என்று கம்பத்து மக்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி கூடிய விரைவில் இந்த குடியிருப்பு பகுதியை காலிசெய்யுங்கள் இல்லை என்றால் நீங்கள் சட்டடி தண்டிக்கப் படுவீர்கள் என்று மிரட்டும் தோரனையில் அறிக்கை வெளியிட்டு இருபது முறையான, விவேகமான செயல் அல்ல என்று பேராசிதியர் இராமசாமி கூறினார்.

இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் இக்கம்பத்தில் மலாய் சமூகமும் வாழ்ந்து வருகிறார்கள், ஒரு காலத்தில் ஆனந்த புறம் என்று அழைக்கப்பட்ட இந்த பிறை வட்டாரத்தில் அதிக அளவிலான இந்தியர் வாழ்ந்து வந்த இடமாகும்.

வெறும் காண்டா காடாக கிடந்த இந்த இடத்தை நாங்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், காண்டா காடுகளை சுத்தம் செய்தி அங்கு குடியிருப்புகளை அமைத்து, நாட்டின் சுதந்திரத்திறத்திற்கு முன் இருந்தே வாழ்ந்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை இங்கேயே அமைத்துக் கொண்டு வாழ்கிறோம். எனவே ஏழை மக்களை ரயில்வே நிறுவனம் விட்ட நினைத்தால், நாங்கள் எங்கேதான் செல்வது என்று மூதாடிகள் முதற்கொண்டு இளம் தலைமுற்சியினர் கேள்வி எழுப்பினர்

இந்த பிரச்சனையில் தாம் முழு மூச்சாக இறங்கி இந்திய, மலாய் சமூகத்தின் உரிமை போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்க விருப்பதாக கடந்த மூன்று முறை பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினதாக இருந்து வரும் பேராசிரியர் இராமசாமி திட்ட வட்டமாக கூறினார் . ரயிவே நிறுவனம் கம்போங் மானிஸ் மக்களின் வீட்டுப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வுக் கண்ட பின்புதான், இந்த நிலத்தை கையடக்கப் படுத்த முடியும் என்றும், அப்படி இல்லை என்றால் எந்த ஒரு மேம்பாடு திட்டத்தையும் பினாங்கு மாநில அரசு அங்கிகரிக்காது என்றும் அவர் திட்ட வட்டமாக கூறினார்.

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *