English Tamil Malay


ஜோர்ஜ்டவுன் ஜூலை 21
இன்று காலை ஜுருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே ஹாஜ்ஜி பெருநாள் தொழுகைக்காக நூற்றுக்கணக்கான அந்நிய நாட்டவர்கள் ஒன்று கூடியதை தடுத்து நிறுத்த போலீஸ் தவறியதற்காக பினாங்கு தலைமை போலீஸ் முகமட் ஷுஹாய்லி முகமட் ஜாயின் பினாங்கு மக்களிடம் மன்னிப்பு கோரினார்.

“எஸ்ஒபி நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநில போலீஸ் சமரசமாக போகாது என நேற்று நடந்த செய்தியாளர்கள்
கூட்டத்தில் நான் தெளிவாக கூறியிருந்தேன்” என்றார் அவர்.
ஆனால் இன்று ஜுருவில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், பினாங்கு மக்களிடம் தாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ள காணொளியை பார்க்கையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்த தாக அவர் சொன்னார்.
இந்த இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என பினாங்கு மக்களுக்கு அவர் உறுதி அளித்தார்.

 205 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *