English Tamil Malay


பாடாங் செராய் ஜூலை 19
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாக்காத்தான் ஹராப்பான் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா 80 உணவு கூடுகளை வழங்கினார்.

இன்று சுங்கை காராங்கில் சிரமத்தை எதிர்நோக்கி வரும் 60 குடும்பங்களுக்கு இங்குள்ள விநாயகர் ஆலயம் வளாகத்தில் உணவு குடைகளை அவர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கம்போங் பாடாங் செராய் வட்டாரத்தில் வறுமையில் வாடும் 20 குடும்பங்களுக்கு உணவு கூடைகளளை அவர் எடுத்து வழங்கினார்.


அண்மையில் அனைத்து எம்பிக்களுக்கும் மத்திய அரசாங்கம் வழங்கிய 3 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை வசதி குறைந்த குடும்பங்களுக்கு தான் முழுமையாக செலவிட்டு வருவதாக கருப்பையா தெரிவித்தார்.

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *