English Tamil Malay


பிறை ஜூலை 19பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிறை வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு 500 உணவு கூடைகள் வழங்கப்பட்டதாகப் பிறை சட்டமன்றஉறுப்பினரும் பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.

இங்குப் பிறையில் உள்ள தாமான் சைய் லேங் பார்க்கில் உள்ள கிம்சார் கார்டனை சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு இந்த உணவு கூடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது அவர் குறிப்பிட்டார்.

நேற்று தாமான் சைய் லேங் பார்க்கில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிறை சட்டமன்ற அலுவலகம் தொடர்ந்து உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.



 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *