English Tamil Malay


தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் டத்தோ கா.புலவேந்திரன் 

ஆர்.தசரதன் /அகல்யா

செபராங் பிறை டிச-15மத்திய,செபராங் பிறை பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்று தங்க பதக்கங்க விருதுகளைப்      பெற்று சாதனை படைத்தனர்.

மத்திய,செபராங் பிறை பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்து  மாணவர்கள் பல்வேறு இளம் அறிவியலாளர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு  மூன்று தங்கப் பதக்கம்,ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு  சிறப்பு விருதுகளைப் பெற்று சாதனை படைத்தனர்.இத்தன்வழி பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில் பெற்றுள்ள சாதனை பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளது என கொள்ளலாம்.


இரண்டாவது சிறப்பு விருதாக  அனைத்துலக ரீதியில் சிறப்புக் குழுக்களுக்கிடையே   பங்கு பெற்ற   போட்டியில் மூன்று படிகள் கொண்ட மூலிகை முக கவசம் தயாரித்து   அதே குழுவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு சிறப்பு விருதினை பெற்று  பெருமை  சேர்த்தனர்.

அண்மையில் அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட  இளம் அறிவியலாளர்களுக்கான   கண்டுப் பிடிப்பு போட்டிதனில்   கலந்துகொண்ட  மாணவர்கள் மறு சூழ்ச்சி பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் போட்டியில் சுற்றுச் சூழல் பசுமை  தொழில்நுட்ப மதிப்பிட்டு கண்டுபிடிப்பு  2020 ஆம் ஆண்டுக்கான  போட்டியில் தங்க விருதும் சிறப்பு  விருதும் பெற்றனர்.இதனுடன் தெராங்கானு யுஐடிஎம் பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் நான்கு நாடுகள் பங்கேற்ற 2020  ஆம் ஆண்டுக்கான கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு  போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளனர்.

இதனுடன் உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்துக்கொண்ட ௧௫ நாடுகளிலிருந்து கலந்துகொண்ட ௫௦௦ அணியினர் வெள்ளிப் பதக்கம் வெற்றிகொண்டதாகப் பள்ளியின் தலைமையாசிரியர் வே.தமிழ்செல்வி கூறினார்.

இதனுடன் பள்ளியை சேர்ந்த மாணவர்களான ஜனனி சண்முகம்,ஹாஸ்வித்ரா நாயர் நந்தகுமார்,ருத்ராகஸ்  சரவணன்,பவித்திரா உதயகுமார் மற்றும் யாஷினி பாலு ஆகியோர்  மாறு   சுழற்சி பொருட்களைக் கொண்டு குறிப்பாக தாவரவியல்,பழங்கள் அதன்  கழிவுகளிருந்து விவசாயத்துக்கு உதவும் பூச்செடிகளை  நட உதவும் பாசிகளைக்   கண்டுபிடித்ததின் பேரில் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இரண்டாவது சிறப்பு விருதாக  அனைத்துலக ரீதியில் சிறப்புக் குழுக்களுக்கிடையே   பங்கு பெற்ற   போட்டியில் மூன்று படிகள் கொண்ட மூலிகை முக கவசம் தயாரித்து   அதே குழுவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு சிறப்பு விருதினை  பெருமை சேர்த்தனர் .

டத்தோ கா.புலவேந்திரன்

மூன்றாவது வெற்றியாக   மாணவர் கிஷன் அவர்கள் தயாரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தான் இயங்கிக் கை  கழுவும் திரவ இயந்திரம் கண்டுபிடிப்புக்கு 2020  ஆம் ஆண்டுக்கான  மலேசிய ரீதியிலான சிறப்புக் கண்டுபிடிப்பு விருதினை பெற்று சாதனை படைத்தது.  

இந்நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியை வே.தமிழ்ச்செல்வி,அறிவியல் இளம் ஆய்வாளர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் சிறப்பு விருதுகளைப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் உதவியாக இருந்த பள்ளியின் வாரியக் குழு தலைவர் டத்தோ க.புலவேந்திரன் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருக்கு அவர் நன்றி கூறினார்.

இதனிடையே சிறப்புரையாற்றிய பெர்மாத்தாங் திங்கி பள்ளியின் வாரியக்குழுதலைவர் டத்தோ க,புலேந்திரன் மதுரையில்,பள்ளிக்குப் பெருமை சேர்த்து அனைத்துலக ரீதியில் மற்றும் தேசிய ரீதியில் நடந்த இளம் அறிவியலாளர்கள் போட்டியில் சிறந்த விருதுகளைப் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த அறிவியல் துறையில் தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும் என்றும் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.

வட மாநில இளம் அறிவியலாளர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சுரேந்திரன் அவர்கள்,பூச்சோங்  வட்டாரத்தில் தொடங்கப்பட்ட அறிவியலார் பயிற்சிப் பட்டறையில் பல தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்  கலந்துகொண்டு பயிற்சி பெற்றதுடன்,பினாங்கு மாநிலத்திலிருந்து  இளம் அறிவியலாளர் போட்டிக்கு  முதல் பள்ளியாக பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி தேர்வுப் பெற்று மூன்று சிறப்பு விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இதர பள்ளி மாணவர்களுக்கு நிகராக அறிவியல் துறையில் சாதனைகளைப் பெற முடிய என்பதற்குத் தக்க சான்று  எனச் சுரேந்திரன் புகழாரம் சூட்டினார். இதனிடையே பாராட்டு விழாவில் உடன் பெர்மாத்தாங் தமிழ்ப்பள்ளியின்  முன்னாள் தலைமையாசிரியர் அ.வீராசாமி,தொழிலதிபர் சண்முகம், பள்ளியின் ஆசிரியர்கள்  மாணவர்களின் பெற்றோர்கள்  உடன் கலந்து சிறப்பித்தனர்.

 114 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *