English Tamil Malay

பினாங்கில் மார்பல் தொழில் துறையில் பெருமைமிகு முதல் இந்திய நிறுவனம்.

தொகுப்பு : ஆர்.தசரதன்

பேராக், தைப்பிங் செலின் சிங் தோட்டத்தில் தோட்டப் பாட்டாளியான கிருஷ்ணசாமி மாணிக்கம்மாள் தம்பதிகளின் மூன்றாவது மகனாக பிறந்த சண்முகம் கிருஷ்ணசாமி  மார்பல் தொழில் துறையில்   தடம் பதித்து இளம் தொழிலதிபராக வளம் வந்துக்கொண்டு வருகிறார்.தனது, தொடக்க  கல்வியை செலின் சிங் தோட்ட தமிழ்ப்பள்ளியில்  கற்று இவர், தைப்பிங்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முதல் முறையாக  வேலைக்கு சேர்ந்த அனுபவத்தைப்  பெற்றதாக சண்முகம் கூறினார்.அதனை தொடர்ந்து பினாங்கு மாநிலத்திக்கு வந்த சண்முகம் தொழிற்சாலை ஒன்றில் வேலையைத் தொடங்கி செய்துள்ளார்.

இதற்கிடையே மேலும் ஒரு தொழிலாக பேக்கிங் (Packaging) எனும் தொழிலை  சொந்தமாக செய்து  வந்ததுடன்,அதற்க்குத் தனது மனைவி காயத்திரி அவர்களின் உதவியுடன் சிறு அளவில் வியாபாரம் நடத்தப்பட்டு வந்ததாகத் சண்முகம் ஆலை ஒலி ஊடகத்துக்கு  வழங்கிய சிறப்பு பேட்டியில்  குறிப்பிட்டார்.

பினாங்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த சண்முகம்,அந்த தொழிற்சாலை நிர்வாகம் மூடுவதாக அறிவித்ததை தொடர்ந்து தாமும் தன்னுடன் சினேகதமாகப் பழகிய ஈரானிய நண்பரும் மற்றும் பலரும் வேலை இழக்க நேரிட்டது என்றார் சண்முகம்.

இதனுடன் தன்னுடன் வேலை செய்த ஈரானிய நண்பர் தமது நாட்டில் மார்பல்  மற்றும் கிரேனைட் கற்கள் சிறந்த மதிப்புடைய தரத்தில் இருப்பதாகவும் அதனை மலேசியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை துறையில் ஈடுபடுமாறு வலியுறுத்தியதுடன்,  மார்பல் கற்களை   மலேசிய சீதோஷண நிலைக்கு ஏற்ப தகுதியுடையவை என்பதாலும் விற்பனை செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்ததின் பேரில் மார்பல் தொழில் துறையில் தனது பங்குதாரர் மகேந்தரன் என்பவருடன் இணைந்து மார்பல் மற்றும் கிரேனைட் கற்கள் விற்பனை தொழில் துறையை மற்றும் மார்பல் பொருத்தும் சிறு சிறு குத்தகைகளை பெற்று தொழிலை தொடங்கியதாக   மனம் திறந்தார் சண்முகம்.

சண்முகம்.


சண்முகம் அவர்களியுடன் கூட்டாக இணைத்த மகேந்திரன் அவர்களும் சாதாரண தோட்ட பாட்டாளி மகனாக மேப்பில்டு தோட்ட தமிழ்ப்பள்ளியில் ஆரம்ப கல்வியை தொடங்கியவர்,கூலிம் தொழில் நுட்ப கல்லூரியில் பொரியல் துறையில் பட்டமும் பெற்றுள்ளார்.இருவரின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட தி ஸ்தோன் மார்பல் எனும் நிறுவனத்தை செபராங் பிறை,புக்கிட்மெர்தாஜாம் மத்திய மாவட்டத்தில் உள்ள தாமான் டெலிமா பகுதியில் 3 மாடி கட்டிடமாக இன்று காட்சியளிக்கிறது.

சண்முகம் உடன் மாகேந்திரன்

இதில் 10 அலுவக பணியாளர்களுடன் 50 தொழிலார்கள் அந்த நிறுவனத்தில் பணியாளர்களாக இருந்து வருவதுடன் இரு மார்பல் வடிவமைப்பு தொழிற்சாலைகளை கொண்டு பீடு நடை போடும் இந்திய தொழில் நிறுவனமாக இன்று திகழ்கிறது.10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தெ ஸ்தேன் லயின் நிறுவனத்தை பினாங்கு முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் திருக்கரத்தால் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்ட பெறுமையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில்  மார்பல்  தொழில் துறை வாய்ப்புகளை பெறுவதற்காக தலைநகரில் நடைபெறும் பற்பல கண்காட்சிகளில் தங்களின் மார்பல் மற்றும் கிரேனைட் பொருட்களை காட்சிப்படுத்தி அதன் மூலமாக கிடைக்கு வாய்ப்புகளை பயன்படுத்தியும்  கற்ற அனுபவங்களை  கொண்டு மார்பல் தொழில் துறையில் தங்களின் நிறுவனம்  கால் பதித்ததாக  தங்களின் அனுபவங்களை சண்முகம் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும்  பகிர்ந்துகொண்டனர்.

தெ ஸ்டோன் நிறுவனம் 

வியாபாரத்தில் வெற்றி பெற பொருமை அவசியமான ஒன்று அதில் அதிக உழைப்பு அற்பணிப்பு இருந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி நகர முடியும் என்பதால்,முதல் முதலாக பட்டர்வொர்த்தில் தொடங்கப்பட்ட முதல் வேலை குத்தகை இழக்க நேரிட்டதால் சற்றும் மனம் தளராமல் சிறுக  குத்தகைகளை கொண்டு தொழிலை நடத்திய வேலையில் பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் உள்ள ஐந்து நச்சத்திர தங்கும் விடுதியாக லெட் ஹேட்டல்,ஐகோனிக் கட்டிடம்  ஆகிய பெரும் குத்தகைகள் பெற்று மார்பல் மற்றும் கிரேனயிட்  கற்கலை பொருத்தும் பணிகள் வெற்றிகரமாக தங்களின் தி ஸ்டோன் மார்பல் நிறுவனம் மூலமாக தொடரப்பட்டது என மகிழ்சியுடன் தெரிவித்தனர்.

மகேந்திரன்


இதனிடையே இந்தியர்கள் மார்பல் தொழில் துறையில் ஈடுபடுவது மிக குறைவானதாக இருக்கின்றன என்றும் இளம் இந்திய  சமூகத்தினர்  இது போன்ற தொழில் துறைகளில் ஈடுபடுவதன் மூலமாக பல புதிய தொழில் நிபுணத்துவதைக் கற்றுக்கொள்ள முடியும என இருவரும் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
சொந்த தொழில் துறையில் ஈடுபட ஆர்வமும் அனுபவமும் போதுமானது எனக் கூறிய அந்த இளம் தொழிலில்  அதிபர்களின் சண்முகமும் மகேந்திரனும்,  இந்திய இளைஞர்கள்  வாய்ப்புகளை பெறுவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் என்றும்   ஆலோசனை  கூறினர்.

மார்பல்

ஒரு காலத்தில் சீனர்கள் அதிக அளவில் இந்த மார்பல் பொருத்தும் தொழில்களில் அதிகம் இடம் பெற்றிருந்தனர் கால போக்கில் அவர்கள் இத்தொழிலில் குறைந்ததும்,இந்நாட்டிற்கு வந்த அந்நிய தொழிலார்கள்  மார்பல் பொருத்தும் வேளையில் அதிக அளவில் ஈடுபடுவதுடன் அதிக வருமானத்தை ஈட்டு வருகின்றனர். ஆகவே,காலம் தாழ்த்தாமல் நுட்பம் கொண்ட இந்த மார்பல்  தொழில் துறைகளில் அதிகமான  இந்தியர்களும்   ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதுடன்,மார்பல் தொழில் துறை பற்றிய ஆலோசனைகளையும்,நிபுணத்துவத்தை இளைஞர்களுக்கு வழங்க  ஆலோசனைகளை வழங்க  தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஆர்வமுடையவர்கள் சண்முகம் அவர்களை தொடர்புக்கொள்ள அழைக்க வேண்டிய கை தொழைப்பேசி எண் 012-4257802 என்பதுடன் இதில் அழைத்து மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்

 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *