English Tamil Malay


கோலாலம்பூர் ஜூலை 13
நாட்டிற்குள் நுழைய தனது கோவிட் 19 தடுப்பூசி கடப்பிதழில் சீனாவின் சினொவெக் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

இதன்வழி சவுதியில் யாத்திரையை மேற்கொள்ள விரும்பும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நற்செய்தி தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு சமய விவகாரங்களுக்கான பிரதமர் இலாகா அமைச்சர் டத்தோ சுல்கிப்ளி முகமட் கூறினார்.

இவ்வாண்டு சவுதியில் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட மலேசிய யாத்ரீகர்களின் நலன்களுக்காக நாம் பிரார்த்திப்போம் என்றார் அவர்.

இதன்வழி பைசர் பயோன்டெக்,மோடர்னா,அஸ்ட்ராசெனேக்கா,ஜென்சன்,சினோபர்ம் மற்றும் சினொவெக் ஆகிய 6 தடுப்பூசி களுக்கு சவுதி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பைசர் மற்றும் அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே சவுதி யாத்திரையை மேற்கொள்ள முடியும் என்ற அச்சம் ஏற்கனவே எழுந்துள்ளது.

 230 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *