English Tamil Malay


கோலாலம்பூர் ஜூலை 13
கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தில் சிலாங்கூர் மக்களை மத்திய அரசாங்கம் தத்துப் பிள்ளை போல் நடத்திவருவதாக மலேசிய மக்கள் சேவை மையத்தில் மையத்தின் தேசிய தலைவர் டத்தோ பி. மலர்விழி குணசீலன் சாடினார்.

30 லட்சம் மக்கள் தொகை கொண்ட சரவா மாநிலத்தில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. 17 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கோலாலம்பூரில் இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிலாங்கூர் இதுவரை 13 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதால் அவர் சொன்னார்.
இந்த நிலையில் கோலாலம்பூர் மற்றும் செலவை ஒப்பிடுகையில் சிலாங்கூரில் மட்டும் ஏன் இந்தப் பின்னடைவு என அவர் வினவினார்.

இந்த விவகாரத்தில் யாராவது தடைக்கல்லாக இருக்கிறார்களா என சிலாங்கூர் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் சிலாங்கூர் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த தேசிய தடுப்பூசி திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் மற்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசி விவகாரத்தில் பாகுபாடு இருக்கக்கூடாது. அனைவருமே மலேசியர்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *