English Tamil Malay


ஆர்.தசரதன்

ஜோர்ஜ்டவுன் டிச -10சுங்கை ஊலு மூடாவிலிருந்து மூல ஆற்று   நீரைப்  பயன்படுத்துவது தொடர்பாகக் கெடா மாநிலத்திற்கு எந்த இழப்பீடும் வழங்காததற்கு பினாங்கு மாநில அரசு உறுதியாக உள்ளது என மாநில முதலமைச்சர் சௌ குவான் யோவ். சர்வதேச சட்டங்கள் மற்றும் நாட்டில் நீர் பயன்பாடு தொடர்பான உரிமைகளுக்கு ஏற்ப மாநில எல்லையில் உள்ள சுங்கை உலு மூடாவிலிருந்து மட்டுமே பினாங்கு மூல நீர் வளங்களைக் கொண்டுள்ளதா என சௌ குவான் யோவ்   வலியுறுத்தினார். 
 

அண்மையில் கெடா மாநில அரசாங்கம் பினாங்கு மாநில குடி நீர்  வாரியத்திடம்,கெடா மாநிலத்திலிருந்து பெரும் ஆற்று நீருக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அம்மாநில மாநில மந்திரி பெசார் முகமட் சைனுசி கோரிக்கை விடுத்திருந்தார்.

பினாங்கு நீர் வாரிய  கழகம் (பிபிஏபிபி) அளித்த பதிலில் கெடா மாநில  மந்திரி  பெசாரின் கோரிக்கைக்குப் பணம் செலுத்துவது அவசியமான ஒன்று எனவும், குறிப்பாக எல்லை மாநிலமான பினாங்கில் சர்வதேச சட்டம் மற்றும் உரிமைகளுக்கு ஏற்ப தண்ணீரைப் பயன்படுத்துவதில் நாங்கள் எங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதால் நாங்கள் (பினாங்கு) பணம் செலுத்த மாட்டோம் என்று மாநில குடி நீர் வாரியம்  பதிலளித்துள்ளது” என்று முதலமைச்சர் சௌ குவான்  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

எவ்வாறாயினும், ஊலு மூடா வன இருப்பு நிரந்தர வனப்பகுதி என பிரகடனப்படுத்தப்பட்டடுள்ளது  என்பதால்  மத்திய அரசிடமிருந்து இழப்பீடு கோருவதற்கான கெடாவின் முயற்சிகளை பினாங்கு மாநில அரசு ஆதரிக்கிறது என்றார் முதலமைச்சர் சௌ  
 “இந்த நாட்டில் மூல நீர் விநியோகத்திற்கான ஆதாரத்திற்கு அவர்கள் பொறுப்பாளர்களாக இருப்பதால், மத்திய அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெறக் கெடா மாநிலத்திற்கு நாங்கள் தண்ணீருக்கு உரிமை உண்டு என்ற கருத்தை நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் . “கெடா மாநிலத்தை மந்திரி பெசார் முகமட் சனுசி நூ ர்  என்பவருக்கு எல்லாம் உரிமையும் உள்ளது என்பதுடன் கெடா மாநிலத்தை   ஆளும் அரசாங்கக் கட்சியின் ஒரு பகுதியாக இருப்பதால், அவர் இந்த பிரச்சினையை எழுப்ப முடியும் என்றார் அவர்.


மந்தரி பெசார் சனுசியின்  இலக்கு மத்திய அரசாங்கமாக இருக்க வேண்டும். “வடக்கு பிராந்தியத்தில் உள்ள மூன்று மாநிலங்களில் மூல நீர் ஆதாரங்கள் உறுதி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக கெடாவில் உள்ள ஆற்று பகுதியில் உள்ள  காடுகளில் நுழைய அனுமதிக்காததற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இதற்கிடையில்,  மாநில குடிநீர் வாரியம் ஆற்று  வனப்பகுதிக்கும் நுழைய அனுமதிக்காத கெடா மந்திரி பெசாரின்  அறிக்கையை மிகவும் பொறுப்பற்ற அறிக்கை என்று சௌ குவான்  யோவ் விவரித்தார். 

மந்திரி பெசார் சைனுசி  எந்தவொரு கட்சியும் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் எந்தவொரு இடத்திற்கும் செல்வதைத் தடுக்க முடியாது. “ஊலு முடா கெடா மாநிலத்தில் அமைந்திருந்தாலும், எந்தவொரு தரப்பினரும் அந்த பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று எந்த அறிவுறுத்தலும் இல்லை. “இந்த நாட்டில் சட்டத்தில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், மந்திரி  பெசார் பெசார் பேராக்  அல்லது கோலாலம்பூருக்குச் செல்ல விரும்பினால் பினாங்கு கடப்பதை என்னால் தடுக்க முடியாது.

“எல்லாவற்றிற்கும் மேலாக, பல அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) ஊலு முடாவிற்கு விஜயம் செய்துள்ளன, ஏனெனில் பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு வட பிராந்தியத்தில் 4.6 மில்லியன் மக்களுக்கு மூல நீர் ஆதாரமாக இருப்பதுடன்  இயற்கை நீர் வளங்கள் உல்ல  பகுதிகளில் உள்நுழைய அனுமதிக்கும் கெடா மாநில அரசின் நடவடிக்கை குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். , ”என்றும்  அவர் கருத்து தெரிவித்தார்.  

 24 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *