English Tamil Malay


ஜெராண்டுட் ஜூலை 11
ஜெராண்டுட் வட்டாரத்தில் வசதி குறைந்த 25 குடும்பங்களுக்கு பகாங் மக்கள் சக்தி கட்சி அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது.
இனபாகுபாடின்றி இந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக பகாங் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் கணேஸ்வரன் கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து இந்த குடும்பங்களில் பலர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சொன்னார்.

இதுவரை தங்களுக்கு எந்தவொரு தரப்பினரும் உதவ முன்வரவில்லை என இவர்கள் தங்களிடம் விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு பகாங் மாநில அரசாங்கம் மற்றும் வர்த்தக பெருமக்கள் உதவ முன்வரவேண்டும் என கணேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட ரீதியாக பகாங் மக்கள் சக்தி கட்சி உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜெராண்டுட் தொகுதி தலைவர் ஆனந்த்,மெந்தகாப் தொகுதி தலைவர் அர்ஜுன் ஆகியோரும் இணைந்து இந்த உதவிப் பொருட்களை வழங்கினர்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *