English Tamil Malay


சுங்கைப்பட்டாணி ஜூலை 9-ஒரு வீட்டில் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டால் அவருக்கு ஒரு அடையாள சின்னம் (Tag) அணிவிக்கப் படுகின்றது.ஆனால் அந்நபர் முழுக்கைச் சட்டை அணிந்து அடையாள சின்னத்தை மறைத்து வெளியில் சுற்றுவதனால் பலருக்கும் தொற்று பரவுகின்றது.

அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர்களும் நோயைப்பற்றி உணராமல் வெளியில் சுற்றுவதினால்  குடும்ப உறுப்பினர்களும்  மற்றவர்களும் நோய்த் தொற்று கண்டு அவதிப்படுகின்றனர்.
ஆலோசனை கூறுபவர்கள் பேச்சைக் கேட்பதில்லை,மருத்துவர்கள் ஆலோசனையும் புறக்கணித்து விடுவதால் கோவிட் தொற்று அதிகரித்துக் கொண்டே வருவது வேதனை அளிப்பதாகக் கதிரவன் வடிவேலு தெரிவித்தார்.

கோவிட் தொற்று கண்டவர்களிடம் பேசும் போது முகக்கவரி அணியாமல் பேசினால் தொற்று நமக்கும் பற்றும் என்பதால் முகக்கவரி அணிந்து  வெளியில் சென்று வந்ததும் குளிப்பது நல்லது எனக் கதிரவன் மேலும் கூறினார்.

அடிக்கடி முகக்கவரி மாற்றுவது சிறந்தது என்றும் அது பயனளிக்கும் என்பதால் முகக்கவரி அணிவோம் தொற்று பரவாமல் தடுப்போமென கோலமூடா மாவட்ட சூரியன் சமூக நல இயக்கத் தலைவர் கதிரவன் வடிவேலு ஆலோசனை கூறினார்.

 28 total views,  2 views today

One thought on “முகக்கவரி அணிவது வரவேற்க தக்கது.பிறரிடம் பேசும் போது முகக்கவரி அகற்றி விட்டுப் பேசுவது ஆபத்து.கதிரவன் வடிவேலு அறிவுறுத்து.”
  1. முகக் கவரி அணிவது மட்டுமே கோவிட் பரவுவதை தடுக்காது.ஒவ்வொருவரும் முழு எஸ்.ஓ.பி யை கடைபிடித்தால் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.அதே சமையம் அரசாங்கம் கடுமையான போக்கை கடைப்பிடிக்காமல் எஸ்.ஓ.பி யை தலர்த்திக் கொண்டே இருப்பதும் தொற்று கூடுவதற்கு காரணமாகும்.தற்போது தொற்று கூடியதற்கு சுகாதாரத் துறையின் மெத்தனப் போக்கும், தற்காப்பு துறையின் புரியாத விதிமுறைகளே காரணம்.இன்று மக்களை பாதுகாக்கும் மருத்துவர்களுக்கும்,தாதியர்களுக்கும் சுங்கைப்பட்டாணி மருத்துவமணையில் தொற்று பரவியுள்ளதே நல்ல உதாரணம்.எனவே சொல்லியும் கேட்காத மக்களுக்கு கடுமையான சட்டமே பயனளிக்கும்.முகக்கவரி,அடிக்கடி கைகளை கழுவுதல்,கூடல் இடைவெளி இம் மூன்றுமே தொற்றை கட்டுப்படுத்த உதவும்.
    ஜிகே.குணா
    சு.பட்டாணி
    Ahli Lembaga
    Kesedaran pencegahan jenayah malaysia.

    Reply
    Leave a Reply

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *