கோலாலம்பூர், ஜூலை 8- நாட்டில் இன்று 135 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதனுடன கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் தற்போது எட்டு லட்சத்தை கடந்து 808,658 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மே மாதம் 9,020 பேர் தொற்றுக்கு உள்ளாகினர். அதன் பிறகு இரண்டாவது முறையாக இன்று 8,868 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என ஆவது மேலும் கூறினார்.
தற்போது மருத்துவமனையில் 77,275 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், தீவிர சிகிச்சை பிரிவில் 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 445 பேருக்கு சிகிச்சை பெற்று வருகிறது என்பதுடன் இன்றோடு இதுவரை 5,903பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
268 total views, 1 views today