English Tamil Malay


குவந்தான் ஜூலை 7
பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இங்குள்ள 50 குடும்பங்களுக்கு பகாங் மக்கள் சக்தி கட்சி உதவிக்கரம் நீட்டியது.

வறுமைக் கோட்டில் உள்ள இந்த குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களை பகாங் மக்கள் சக்தி கட்சி தலைவர் கணேஸ்வரன் மாநில மகளிர் அணி தலைவி கனகா மற்றும் சத்தீஸிடம் வழங்கினார்.

இந்த அத்தியாவசிய பொருளுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுவைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக கணேஸ்வரன் தெரிவித்தார்.

பகாங் மக்கள் சக்தி கட்சி மாநிலத்தில் சிரமத்தை எதிர்நோக்கி வரும் இந்தியக் குடும்பங்களுக்கு அவ்வப்போது உதவி வருவதாக அவர் சொன்னார்.

 110 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *