English Tamil Malay


சிப்பாங் ஜூலை 7
அரசியல் விளையாடுவதற்கு இது நேரம் அல்ல என தேசிய கோவிட் 19 தடுப்பூசி திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலிருந்து வெளியேறும்படி சில தரப்பினரின் கோரிக்கைக்கு தாம் செவிசாய்க்க போவதில்லை என்றார் அவர்.

தேசிய கோவிட் 19 தடுப்பூசி திட்டம் சுமுகமாக செயல்படுவதில் மட்டுமே தாம் கவனம் செலுத்தப் போவதாக அவர் சொன்னார்.
இன்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்தில் தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்த பின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சருமான அவர் பேசினார்.

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அம்னோ எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்னோ தலைமைத்துவத்தின் கோரிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் விளையாடுவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி நேற்று அம்னோ எம்பிக்களுடன் கட்டம் கட்டமாக சந்திப்புகளை நடத்தினார்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *