English Tamil Malay


கோலாலம்பூர் ஜூலை 4
ஆர்டிஎம் ரேடியோ 6 ன் இன்றைய உருமாற்றத்திற்கு வித்திட்டவர் அதன் முன்னாள் தலைவர் டாக்டர் வி.பூபாலன் என மலேசிய மக்கள் சேவை மையத்தின் தேசிய தலைவர் டத்தோ மலர்விழி குணசீலன் வர்ணித்தார்.

டாக்டர் பூபாலனின் தூரநோக்கு சிந்தனை மற்றும் வியூகம் தான் இன்று மின்னல் எப்எம் என்றழைக்கப்படும் ஆர்டிஎம் தமிழ் பிரிவான ரேடியோ 6 இந்து சமூகத்தை கவர்ந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலஞ்சென்ற ஆர். பாலகிருஷ்ணனுக்கு பிறகு ரேடியோ 6 ல் ஒரு பெரிய இடைவெளி இருக்குமென இந்திய சமூகத்தினர் கருதத் தொடங்கினார்.
ஆனால் டாக்டர் பூபாலனின் வருகையை தொடர்ந்து ரேடியோ 6 மீண்டும் மிளிர தொடங்கியது.

இவரின் வருகையால் தான் ரேடியோ 6 இருபத்து நான்கு மணிநேர ஒளி அலையாக மாற்றம் கண்டது.டாக்டர் பூபாலனின் ஆற்றலினால் தான் கடந்த 1977 ல் ஆர்டிஎம் 50 லட்சம் வெள்ளி விளம்பர வருமானத்தை பெற இயன்றது.
தமது காலத்தில் அனுபவமிக்க குழுவினரை கொண்டு பூச்சரம், கேள்வி மேடை, கருத்தரங்கம், கவியரங்கம் போன்ற படைப்புகளின் வழி பூபாலன் மக்களைக் கவர்ந்தார்.

ரேடியோ 6ஐ இன்று புகழ் பெற்று விளங்கும் மின்னல் எப்எம் பெயர் மாற்றத்திற்கு டாக்டர் பூபாலன் தான் காரணம் என மலர்விழி குணசீலன் குறிப்பிட்டார்.

 34 total views,  2 views today

One thought on “ரேடியோ 6 உருமாற்றத்திற்கு வித்திட்டவர் டாக்டர் பூபாலன்”
  1. The write up on Dr.V. Poobalan (former R6 Head) Is very short and sweet. Art , culture and language is still alive in this county
    Because of such a talented man like him. Thank you for remembering his deeds

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *