English Tamil Malay

கதிரவன் வடிவேலு அறிவுறுத்து.

சுங்கை பட்டாணி ஜூலை 1- நாட்டில் தற்போது கோவிட் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த
வண்ணம் உள்ளது.நமது மலேசியர்கள் இப்பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு நடமாடுவது வேதனைக்குறிய விசயமென கோலமூடா மாவட்ட சூரியன் சமூக நல இயக்க தலைவர் கதிரவன் வடிவேலு தெரிவித்தார்.

நம் மலேசியர்கள் இன்னமும் கோவிட் தொற்றை பற்றி கவலையில்லாமல் முகக்கவரி அணியாமல் சுற்றுவதையும் தவிர்ப்பது நல்லது.வீட்டிற்கு தேவையான
பொருட்களை வாங்கும் போது முறையாக எஸ்.ஒ.பியை கடைபிடிக்கும் கடைகளில் வாங்க வேண்டும்.

அதைவிடுத்து நடமாட்ட கட்டுப்பாட்டை மீறி செயல் படும் வியாபாரிகளிடம் வாங்குவது தவறான
செயல் என பொது மக்களை கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.மரண இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திலும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பத்து பேர்களை விட அதிகமானர் கூடுகின்றனர்.

சாலையோரம் செயல்படும்
எஸ்.ஒ.பியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்யுமிடத்திலும் அதிகமானர் கூடுவதை பார்க்கமுடிகின்றது.

அதிகமானோர் கூடும் இடத்தை தவிர்ப்பது நல்லது.மூவினம் வாழுமிடத்தில் எந்த கடைக்கு சென்றாலும் முறையாக விதிமுறைகள் கடைபிடிப்பதை உறுதி செய்து பொருள்களை வாங்கவேண்டும்.

வீதிமுறைகளை மீறினால் நம்மீது கோவிட் தொற்றுதல் அதிகரித்து மரணத்தை விளைவிக்குமென அவர் கவலையடைவதாக குறிப்பிட்டார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *