English Tamil Malay

ஜோர்ஜ்வுன் ஜூன் 30- பொது ஊடகத்தால் கோவிட் 19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்க முடியாது என மலேசிய அறிவியல் பல் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர் குமித்தா தேவ தாஸ் கூறினார்.
அதிகமான தொற்றின் தாக்கம் தொடர்ந்து உணரப்பட்டு வருவதால், தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர குறையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பெரும்பாலான மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் தொற்றின் எண்ணிக்கை குறையும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு எம்சிஒ அமலாக்கப்படும் இந்த தொற்று ஏன் அதிகரித்து வருகிறது என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.

நாட்டில் கடும் தாக்கத்தை கொண்ட ஒரு தொற்று உருவெடுக்கும் சாத்தியம் உள்ளது. இதன் காரணமாக கோவிட் 19 தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு காடும் என டாக்டர் குமித்தா கோடி காட்டினார்.

 18 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *