English Tamil Malay


பிறை ஜூன் 29
இங்கு ஜாலான் கூராவ் 3 கோவிட் 19 தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சை லெங் பார்க் பொது மண்டபத்தில் கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிறை சட்டமன்ற அலுவலகம்,சூ சீன பௌத்த இயக்கம்,பெலித்தா நாசி கண்டார், மாவட்ட சுகாதார அலுவலகம் மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் செபராங் பிறை மாநகர் மன்றம் ஆகிய தரப்பினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, சூ சீ பௌத்த இயக்கத்தின் தலைவர்,செபாராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர்களான டேவிட் மார்ஷல் மற்றும் மற்றும் ஜேசன் ராஜ் ஆகியோர் பரிசோதனை நடவடிக்கையை பார்வையிட்டனர்.

சுமார் 400 வியாபாரிகள் மற்றும் வருகையாளர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வரும் ஜூலை 1ஆம் தேதி மேலும் 1000 பேருக்கு பிறை சட்டமன்ற அலுவலகம் இந்த பரிசோதனயை மேற்கொண்டு வருகிறது.

பினாங்கு துணை முதலமைச்சரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் பி. இராமசாமி அவர்கள் கலந்துக்கொண்டு கோவிட்-19 மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டார்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *