English Tamil Malay

ஆர். தசரதன்

பாடாங் செராய் ஜூன் 29-பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா சார்பில் லூனாஸ் சட்ட மன்ற மற்றும் தாமான் லோபாக் பகுதியில் வசதி குறைந்த மக்களுக்கு வீட்டுக்குத் தேவையான உதவி பொருட்களை வழங்கி ஆதரவளிக்கப்பட்டது.

இதனிடையே பாடாங் செராய் நாடாளுமன்ற பகுதியில் உட்பட்ட சுங்கை காராங்கான் பகுதியில் உள்ள பேருந்து நிற்கும் இடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து மு. கருப்பையா நேரடியாக அந்த பேருந்து நிற்கும் இடத்தை பார்வையிட்டதுடன் அதனைப் பழுதுபார்க்க பொதுப் பணி இலாக்காவிற்குக் கடிதம் எழுதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

 60 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *