English Tamil Malay


பெங்கேராங் ஜூன் 29
கோவிட் 19 தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த வட்டாரத்தை சேர்ந்த மக்களுக்கு பெங்கேராங் நகராண்மைக் கழகம் கோவிட் 19 பொருளுதவிகளை வழங்கின.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜொகூர் மஇகா மகளிர் அணி தலைவியும் பெங்கேராங் நகராண்மைக் கழக உறுப்பினருமான சரஸ்வதி மற்றும் பெங்கேராங் மஇகா தொகுதி தலைவரும் நகராண்மைக் கழக உறுப்பினருமான பசுபதி இந்த உதவிப் பொருட்களை வழங்கினார்.


கோவிட் 19 தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் அடையாளம் காணப்பட்டு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சரஸ்வதி கூறினார்.
அதேவேளையில் ஜொகூர் மஇகா மகளிர் அணியினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *