English Tamil Malay

பினாங்கு ஜூன் 29- பினாங்கு ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி இராமதாசர் பள்ளியாக பெயரை மாற்றி கண்டது சாலச் சிறந்தது.

பினாங்கிலுள்ள ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியின் பெயரை இராமதாசர் தமிழ்ப்பள்ளியென மாற்றியமைத்தது சாலச் சிறந்ததென கெடா மாநில மலேசிய திராவிட கழகத் தலைவர் கதிரவன் வடிவேலு கூறினார்.

பினாங்கு மாநிலத்தில்,ஐம்பது ஆண்டுகளாக தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பங்காற்றினாரென பெருமிதத்துடன் அவர் கூறினார்.

இப்பெயர் மாற்றத்திற்கு மூலக்காரணம் பினாங்கு மாநிலத்தின துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமியென அவர் புகழ்ந்துரைத்தார் அவருடன் இணைந்து இப்பள்ளியின் பெயர் மாற்றத்திற்கு உறுதுணையாக செயல்பட்டவர்கள் மலேசிய முத்தமிழ் புலவர் இராமதாசர் மன்றத்தின் தலைவர் கவிஞர் பெ.க.நாராயணனும் அவர் தம் செயலவை உறுப்பினர்களும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளிகள் ஊர் அல்லது சாலையின் பெயலேயே வைக்கப்பட்டுள்ளதாக எனவும் அப்பள்ளிகளுக்கு தமிழுக்கு தொண்டாற்றியவர்களின் பெயரை சூட்டுவது சாலச் சிறந்தது என்பதுடன் அதனை வாழ்த்தி வரவேற்கலாமென கதிரவன் வடிவேலு கூறினார்.

 70 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *