English Tamil Malay


கோலாலம்பூர் ஜூன் 29
எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவசர காலம் முடிவடைவதற்கு முன்பாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சா வலியுறுத்தினார்.


அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.கோவிட் 19ஐ கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் அதிகாரம் அல்ல இது. அவசர காலம் என்பது மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

விரைவில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தும்படி இன்று பெட்டிஷன் கையெழுத்து பிரச்சாரத்தை தொடக்கி வைத்த பின் அவர் பேசினார்.

நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவதற்கு பெட்டிஷனில் கையெழுத்திடும்படி நாட்டு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.”மலேசிய அரசியலில் நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறேன். ஆனால் தற்போது உள்ள இப்படி ஒரு நிலை நான் கண்டதில்லை”என முன்னாள் நிதி அமைச்சருமான அவர் சொன்னார்.

“எனக்கு போதுமான அனுபவம் உள்ளது. பல சம்பவங்களை நான் கடந்து வந்துள்ளேன். ஆனால் தற்போது நமது எதிர்காலத்தை நினைத்து அஞ்சுகிறேன்”என்றார் அவர்.

நடப்பிலுள்ள அவசரகால நிலை கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
நமக்கு அவசர காலம் தேவையில்லை. இவை அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.

 64 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *