English Tamil Malay


காஜாங் ஜூன் 29-
கோவிட் 19 தாக்கத்தால் வேலைகளை இழந்து சிரமத்தை எதிர்நோக்கி வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க BeliGas Malaysia நிறுவனம் முன்வந்துள்ளதாக பிகேஆர் புக்கிட் காஜாங் பாரு கிளையின் தலைவர் ஜே.கேரன் கஸ்தூரி கூறினார்.
அண்மையில் BeliGas Malaysia நிறுவனத்தின் உரிமையாளர் சுதன் என்பவருடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இந்த நற்செய்தி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு துடிப்புமிக்க இளைஞரான சுதன் கடந்த ஓராண்டு காலமாக இந்த துறையில் ஈடுபட்டு, தற்போது சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 13 கிளைகளை திறந்துள்ளார் என்றார் அவர்.
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் வேலைகளை இழந்து தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்து சுதனுடன் தாம் விரிவான பேச்சுவார்த்தையை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

துடிப்புமிக்க இளைஞர்கள் இன பாகுபாடின்றி BeliGas Malaysia நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளுக்கு 60102404463 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நமது இளைஞர்கள் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேரன் கஸ்தூரி கேட்டுக்கொண்டார்

இவ்வேளையில் தமது நிறுவனத்தில் துடிப்புமிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ள சுதனுக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

 102 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *