English Tamil Malay


ரா.மணியம்
ஜொகூர் பாரு ஜூன் 28
இங்குள்ள கோவிட் 19 தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் முதியவர்களுக்கு உதவும் வகையில் பாக்காத்தான் ஹராப்பான் ஜொகூர் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் லியாவ் லாய் துங் 5 சக்கர நாற்காலிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்து விட்ட போதிலும் நாட்டில் போதுமான தடுப்பூசிகளை என இன்று இங்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களும் அவர் பேசினார்.

இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டில் எண்பது விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்பது சந்தேகமே என அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களை அச்சுறுத்தி வரும் டெல்தா வெரியன்ட் கோவிட் 19 தொற்றை எதிர்த்துப் போராட அதிகமானோருக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவேண்டும் என்றார் அவர்.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வழிமுறையை மலேசிய அரசாங்கம் மறுசீரமைப்பு செய்யவேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *