English Tamil Malay

அகல்யா

மதிக கெடா மாநிலம் கடும் கண்டனம்

சுங்கைப்பட்டாணி ஜூன் 28-பினாங்கு பாயா தெரேபோங் குடியிருப்பு பகுதியில் மனிதாபமின்றி 9 குரங்குகளை விஷமிட்டு கொன்ற செயலை வன்மையாக கண்டிப்பதாக மதிக கெடா மாநில தலைவர் கதிரவன் வடிவேலு தெரிவித்தார்.

உணவை தேடி வரும் குரங்குகளை ரொட்டி சானாயில் விஷமிட்டு கொன்ற நபரை காவல் துறை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்று தர வேண்டுமென அவர் கூறினார்.


நாட்டின் வளர்ச்சிக்காக காட்டை அழித்த மனிதன் மிருக வசிப்பிடங்களை அழித்து விட்டதால் மிருகங்கள் உணவுக்காக மனிதன் வசிப்பிடத்தை நாடி வருகின்றது.

அது மனிதனின் தவறே தவிர மிருகத்தின் தவறல்ல என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நாடு தழுவிய நிலையில் உள்ள மிருகங்களை நேசிப்பவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடயே பாயா தெரேபோங் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த கொடூரச் செயல் குறித்து வட கிழக்கு மாவட்டத்தில் ஆடவர் செய்யப்பட்ட புகார் குறித்து வட கிழக்கு மாவட்ட காவல் துறை அதிகாரி ஏசிபி சோப்பியன் சந்தோங் அவர்களிடம் அலை ஒளி கேட்டறிந்த போது, இவ்விகாரத்தை பினாங்கு வனத் துறையிடம் விபரங்களை கேட்டாறியும் என அவர் குறிப்பிட்டார்.

இவ்விவாகரம் தொடர்பில் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 90 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *