English Tamil Malay

ஆலோஸ்டார் கெடா ஜூன் 24-

உலகத்தை ஆட்டி படைக்கும் கோவிட் 19 கொடுர வைரஸ் தொற்று நோய் தாக்கம்,நம் நாட்டில் மிக பெரிய பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தாக்கத்தை களைய நாட்டில் உள்ள அரசு மருத்துவனனைகள் பல துரித நடவடிக்ககளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் நமது சமூதாய நலன் கருதி,அரசாங்க தீவிர பிரிவில் பணிபுரியும் நிபுணர்களின் ஆலோசனைப்படி,உயிர் காக்கும் உபகரணங்கள்,அதிவேக ஆக்சிஜன் கருவிகள் (High Flow Nesal Oxygen Cannula Machine)அதிகம் தேவை என்பதை கண்டறிந்து, மலேசிய நகரத்தார்கள் மூலமாக வசூல் செய்து,ஐந்து அரசு மருத்தவமனைகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளோம்.

முதல் கட்டமாக செர்டாங் மருத்துவமனைக்கு வழங்கபட்டது.

நேற்று முன் தினம் ஆலோஸ்டாரில் உள்ள சுல்தான் பாஹாகியா பொது மருத்துவமனைக்கு  துரித கருவி முககவசம் மற்றும் பல பொருட்கள் வழங்கபட்டது.

.இதை தொடர்ந்து பழைய மருத்துவமனைக்கும் ஒன்று வழங்கினர்.

மருத்துவ மனை சார்பாக இயக்குனர் PUAN DR ZAITON,அவருடன்
துணை இயக்குனர் EN WAN FAZIL,RESPIRATORY UNIT.நிபுணர் டாக்டர் அர்விந்துடன் டாக்டர் பல்கிஸ் அப்துல்லா பெற்றுக்கொண்டனர்

நகரத்தார்கள் சார்பாக டத்தோ SNK அழகுசுந்தரம்,டாக்டர் KMS ராமசாமி
டாக்டர் S தண்ணிர்மலை,டாக்டர் RM நாச்சம்மை மற்றும் டாக்டர் S வெங்கட் கலந்துக் கொண்டு இந்த நிகழ்வை நடத்தினர்.

ஒரு ஆக்சிஜன் கருவி 30 ஆயிரம் வெள்ளி கொண்டது,அனைத்தும் நகரத்தார்களின் உறுப்பினர்கள் வழி வசூல் செய்யபட்டது.

மோசமான கால கட்டத்தில் நாடு தள்ளபட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கத்துக்கு துணையாக இருப்பதில் நகரத்தார்களின் பங்கு முக்கியமானது என்பதால்.எங்களின் கடமையினை செய்துள்ளோம் என்றார் டாக்டர் தண்ணிர்மலை.

 70 total views,  2 views today

One thought on “மலேசிய நகரத்தார்கள் ஐந்து மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கருவிகளை வழங்கினர்.”
  1. Thanks to Nagarathars of Malaysia for their Humanity shown by providing Medical Oxygen equipments to the hospitals.
    -Thiyaga.Ramaswamy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *