English Tamil Malay

அகல்யா

சுங்கைப்பட்டாணி.ஜுன் 23.
அன்மையில் கெடாவிலும், பினாங்கிலும் நடைபெற்ற முஸ்ஸீம் அல்லாதவர் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலர் நடப்பாட்டு கட்டுப்பபாடு விதிமுறையை மீறி நடந்து கொண்டதால் கோவிட் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அத்துமீறி நடந்து கொண்டதால் இறுதிச்சடங்கு நடத்துனர் உரிமம் இரத்து செய்யப்போவதாக. ஒற்றுமைதுறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ அலிமா சாலே கூறியிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று சுங்கை பட்டாணி சூரியன் எண்டபிரைஸ் உரிமையாளர் கதிரவன் வடிவேலு கண்டனம் தெரிவித்தார்.

இறப்பின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியுமே தவிர அவர்கள் செய்யும் தவறுகளுக்கு இறுதிச்சடங்கு ஏற்பாட்டாளர்களை தண்டிப்பது முறையல்ல என கூறினார். நடமாட்டு கட்டுபாடு காலத்தில் இறப்பில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக எஸ்.ஒ.பியை கடைபிடிக்க வேண்டும் என்பது முறை.மீறுவோர் தண்டிக்கப்படுவர் என தெரிந்தும் சிலர் விதிமுறைகளை மீறுவோர் மிது கடுமையாக தண்டிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இறுதிச்சடங்கு நடத்துனர் அதிகமான சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.கோவிட்-19 காலத்தில் அவர்கள் பணியை பாராட்ட வேண்டுமே தவிர தண்டிக்க கூடாது என அவர் சொன்னார். எனவே ஒற்றுமைத் துறை அமைச்சு இறுதி சடங்கு ஏற்பாட்டு நிறுவனங்களை தண்டிப்பதை விடுத்து , அத்துமீறலில் ஈடுபடுவோர்களை தண்டிக்க வேண்டும் என்று சமூக சேவையாளருமான வ.கதிரவன் கேட்டுக்கொண்டார்.

 251 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *