English Tamil Malay


சுங்கை பட்டாணி ஜூன் 23-கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி நகரில் வாழுந்து வரும் தமிழ் உறவுகளே கோலமூடா மாவட்ட சூரியன் சமூக நல இயக்க தலைவர் கதிரவன் வடிவேலு பதிவு செய்கின்றேன்..கோவிட் தாக்கம் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 5ஆம் மாதம் அதிகமான மலேசியர்கள் கோவிட் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர்.ஜுன் மாதம் இன்றுவரை 30. மலேசியர்கள் மரணம் அடைந்துள்ளனர். தீக்காம் பத்து,தாமான் செஜாத்தி,தாமான் கெளாடி,தாமான் ரியா ஜாயா,ஆகிய பகுதிகளில் மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது பாயா நாகு குடியிருப்பு பகுதியிலும் கோவிட் தீவிரம் அடைந்துள்ளது.
தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம்.கோவிட் தீவிரம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கோவிட் உறுதிப்படுத்தப்பட்டு டேக் அணிவித்து விட்டால் அவ்வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் செல்லக்கூடாது.குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். சீன சமூகத்தின் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு வாரம் கடைகளை அடைப்பது என முடிவு செய்துள்ளனர். நம்முடைய இந்திய சமூதாயம் யார் சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர். மலாய்காரர்கள் மத்தியில் கோவிட் பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது. நடமாட்டு கட்டுப்பாடு (SOP) கடை பிடிக்காமல் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு செல்ல வேண்டாம்.
நம் நாட்டில் எல்லா இனத்தினரும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாட்டை அனுசரித்து நடந்தால் கோவிட் தாக்கத்தை குறைக்க முடியும்.மரணத்தையும் தவிர்க்க முடியும்.முன் பணியாளர்களாக நேரம் கருதாமல் பணியாற்றும் காவல்துறை,இராணுவம், ரேலா,மருத்துவர்கள்,தாதியர்கள் அனைவரின் ஆலோசனைகளை கேட்டு வீட்டிலேயை இருப்போம் (SOP)யை கடை பிடிப்போம்.சுங்கைப்பட்டாணி நகரை கோவிட் இல்லாது செய்வோம்

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *