ரா.மணியம்
பெக்கோக் ஜுன் 23
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் அமலாக்கத்தால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் பெக்கோக் வட்டாரத்தைச் சேர்ந்த 23 குடும்பங்களுக்கு பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் உதவிகளை வழங்கினார்.
இந்த குடும்பங்களில் பலர் கோவிட் 19 தாக்கத்தினால் விதிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு அமலாக்க தான் வேலைகளை இழந்து சிரமத்தில் மூழ்கியுள்ளதாக ராமகிருஷ்ணன் கூறினார்.
தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய உணவு பொருளுதவி இவர்களின் அன்றாட சுமை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
362 total views, 2 views today