English Tamil Malay


சுங்கை லாலாங்..ஜூன் 21-
கடந்த 18 ஆம் தேதி ஜூன் மாதத்தில் கெடா சுங்கை பட்டாணி புக்கிட் செலம்பாவ் தொகுதி தாமான் பண்டார் பாரு குடியிருப்பாளர் பகுதியில் வசிக்கும் குமரேசன் ராதாவு தம்பதிகளுக்கு சொந்தமான வீடு முற்றிலும் தீக்கிறையானது.

இச்சம்பவம் காலை வேலையில் நடந்த போது வீட்டின் உரிமையாளர்கள் உறவினர்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.தங்களின் வீடு தீ பற்றி எரியும் சம்பவத்தை தங்களின் உறவினர் தொலைபேசி வழி அழைத்து குமரேசன் கூறினார்.

குமரேசன் வருவதற்குள் ஆசையாக சேமித்து வைத்த பணத்தில் வாங்கி புதுபித்து கட்டிய வீடு சம்பலானது.
சம்பவத்தை அறிந்த தீயணைப்பு படை வீரர்களின் துணையோடு தீயை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்தனர்.

காவல் துறையின் புகார் தொடர்பில் தீ ஏற்பட்டதுக்காண காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து கெடா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி பிகே குமரேசனுக்கு தெரிய படுத்தவே,மறுநாள் சம்பவத்தின் இடத்தை பார்வையிட்ட பின் பாதிக்கபட்ட குமரேசனுக்கு ஆறுதல் கூறி பின் தமது தரப்பில் உதவிகளை செய்து கொடுக்க உறுதி கொடுத்தார்.

முதல் கட்ட உதவியாக முத்தையாஸ் கேஷ் ஆண்ட் கேரி நிறுவனம் உணவு பொருட்களை வழங்கி ஆதரவு தந்தனர்.
மெர்போக் புக்கிட் செலம்பாவ் கிளப் பாஸ் இந்திய பிரிவு தலைவர் பழனி பாதிக்கபட்ட குமரேசனுக்கு மாநில அரசு வழி உதவிகள் பெற்று தர முன் வருவதாக கூறிபிட்டார்.


அணைத்து தேவைகளுக்கு சிவ சக்தி ஜோதிடர் நிலைய சேவையை நாடுங்கள்.


 18 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *