English Tamil Malay

“மனிதவள துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோஶ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு பிரிமாஸ் நன்றி”

கோலாலம்பூர் ஜூன் 19-ஊடகவியலாளர் லட்சுமி ராம கிருஷ்ணன் அவர்களின் நேரடி ஒளிபரப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பின் விளக்கங்கள் கேட்டறிந்து நமது அமைச்சர் அவர்கள், சுமூகமான தீர்வை மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டது மிகவும் சாதுரியமான செயல் .

இவ்விவகாரத்தில் யார் தவறு செய்திருப்பினும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக அனைத்து சட்ட நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் மலேசிய சட்டத்திற்கிணங்க தங்கள் மீது உள்ள குற்றச்சாற்றை எதிர்க்கொள்ள வேண்டும் எனவும் திண்ணமாக கூறினார்.

இந்தத் தருணத்தில் பிரிமாஸ் அமைச்சருடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி்யது என்னவெனில், ஒட்டு மொத்த மலேசிய இந்திய வம்சாவளி, வர்த்தகர்கள், மக்கள் மீது வெறுப்பு உமிழும் பாங்கில் முதல் பேட்டி அமைந்திருந்தது. எனவே , ஒரு தனி மனிதன் தவறு செய்திருப்பின், ஒட்டு மொத்த வர்த்தக சமூகத்தை பாதிக்கக் கூடாது என்பதாகும்.

நேற்று இணைய நேர்முகத்தின் போது பிரிமாஸ்-யையும் அழைத்து விவாதித்து, சம்பவத்தின்
சூழலையும், உண்மை தன்மை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் அவசியத்தையும் தலைவர் திரு சுரேஸ், துணை தலைவர் கிருஷ்ணன் அவர்களிடம் அமைச்சர் விளக்கினார். மேலும் இந்த சம்பவத்தின் மூலம்
உணவக உரிமையாளர்கள், சிறு தவறுகள் நடப்பது இயல்பு எனினும், அது குற்றமாக உருவெடுக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நமது உணவக உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் பேட்டியில் கூறிய கூற்றில் பல முரண்பாடுகள் இருக்கும் பச்சத்தில், நம்மில் பலருக்கு ஆதங்கம் மேலோங்குகிறது என்பதை பிரிமாஸ் மற்றும் டத்தோ ஶ்ரீ அவரகளும் உணர்ந்து இருப்பினும்,நேர்முக சந்திப்பை விவாதமாக ஆக்குதல் நமது அவசியம் அல்ல. மாறாக இந்த பிரச்சனை நமது சமுதாயம் சார்ந்த, இரு நாட்டின் உறவுகளின் உணர்வுகள் சம்பந்தபட்ட ஒன்று. எனவே நாட்டின் நற்பெயர், மலேசிய இந்திய வம்சாவளி வர்த்தகங்களின் நற்பெயர் மற்றும் எதிர்காலம், அத்துடன் மனித வளத்துறை அமைச்சின் பொறுப்பு மட்டுமல்லாது பல அம்சங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

எனவே இந்தச் சம்பவத்தில் மனிதவள அமைச்சிற்கு அப்பாற்பட்டு , காவல் துறை தீர விசாரணை செய்து வருகிறது. குற்றசாற்றிற்கு உட்பட்ட அந்த உணவகத்தின் செயல்முறை அதிகாரியாக இருந்த நபர் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட உணவகம் தற்சமயம் சந்திக்கும் சூழ்நிலையில் இருந்து மீண்டு வர பிரிமாஸ் சட்டத்திற்கு உட்பட்ட உதவிகள் செய்ய கடமைப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் தொழிலாளர் மீது வன்முறை அல்லது அநீதி இழைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டியது ஒவ்வொரு உணவக உரிமையாளர்களின் கடமையாகும் என்பதை பிரிமாஸ் வலியுறுத்துகிறது.

நன்றி.
சுரேஸ் ஜெயபாலன்
தலைவர்,பிரிமாஸ்

 185 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *