English Tamil Malay
Share

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16-
பிகேஆர் தேசிய பேராளர்கள் மாநாடு வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் மாநாட்டுக் குழு தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார்.


காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கானொலி மூலம் இந்த மாநாடு நடைபெறும் என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
சங்கங்களின் பதிவு இலாக்கா (ஆர்ஓஎஸ்) இந்த மாநாட்டை நடத்த அனுமதி வழங்கிவிட்டதா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்  அவர் கூறினார்.
இந்த மாநாட்டை நடத்த வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சங்கங்களின் பதிவு இலாக்கா பிகேஆர் தலைமையகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிகேஆர் உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து மலேசியர்களும் கட்சியின் முக நூலில் நேரடி ஒலி அலையில் இந்த மாநாட்டை கண்டுகளிக்கலாம் என் அவர் சொன்னார்.

 2 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *