English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 15-
அரசாங்கத்தின் வாடகை குறைப்புத் திட்டம் ஏற்புடையதாக இல்லை என பக்காத்தான் ஹராப்பான் கிள்ளான் நாடாளுமன்றர உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் சிரிய வர்த்தக தரப்பினரைச் சேர்ந்த 27.8 விழுக்காட்டினர் மட்டுமே பயனடைந்துள்ளதாக தமது அலுவகம் மேற்கொண்ட ஆய்வு காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
பலதரப்பட்ட சமூகத்தினரின் சிறுதொழில் வர்த்தகத் தரப்பினரிடம் அண்மையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.


தங்களுடைய கட்டிட உரிமையாளர்கிடமிருந்து சுமார் 51.3 விழுக்காட்டினர் எவ்வித வாடகை குறைப்பையும் பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் இந்த தரப்பினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சொன்னார்.

 197 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *