English Tamil Malay

அகல்யா

பினாங்கு ஜுன் 14
மதிக தேசிய தலைவரும் , பினாங்கு மாநில தலைவருமான மானமிகு ச.த.அண்ணாமலை கேட்டு கொண்டதற்கிணங்க யாயாசான் ஹாசானி குருப் மற்றும் மதிக கெடா மாநிலமும் இணைந்து பினாங்கு மதிக குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்களும் முகக்கவரியும் வழங்கப்பட்டது.

உதவி வழங்கிய யாயாசான் ஹாசானி குருப் மற்றும் மதிக கெடா மாநில தலைவர் கதிரவன் வடிவேலு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக மதிக தேசிய தலைவர் கூறினார்.


பினாங்கு மதிக பணிமனையின் கீழ்த்தளத்தில் நடைபெற்ற 12 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில்
மதிக மத்திய செயலவை உறுப்பினர் கே.கே.ரவீந்திரன்,மதிக மாக்மண்டின் கிளை தலைவர் மு.நாராயணசாமி,மதிக பாகான் ஆசாம் கிளை தலைவர் க.இராமன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கம் கடுமையாக இருந்து வரும் வேளையில் அரசு சார்பற்ற இயக்கங்கள், நிறுவனங்களின் உதவியோடு மக்களின் சுமையை குறைக்கும் பொருட்டு இது போன்ற உதவிகள் வழங்கப்படுவதாக மதிக கெடா மாநிலத் தலைவர் வ.கதிரவன் கூறினார்.

www.pandith-shivashankar. com

 40 total views,  4 views today

One thought on “பினாங்கு மாநில மதிக கிளைகளை குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.”
  1. நல்ல முயற்சி… மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
    தொடர்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *